திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் TNHB காலனி பகுதியில் பாதையை மாற்றுவதை கண்டித்து வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் TNHB காலனி உள்ளது. இதன் அருகே உள்ள சோலைஅழகுபுரம் ,இந்திர நகர் ,ஜெய் ஹிந்புரம் பகுதிகளுக்கு இப்பகுதி மக்கள் 15 வருடங்களுக்கு மேல் பாலம் வழியாக பாதை அமைத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது வீட்டு வது வாரியம் காலியாக உள்ள இடங்களை விற்பனை செய்ய டெண்டர் விட்டுள்ளது . மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பாதைகளை அகற்றிட முடிவு செய்வதை கண்டித்து இப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த மாநகர் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் ஜெய் ஹிந்புரம் இன்ஸ். பால குமரன் மற்றும்போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.