குடோனில் பதுக்கி வைத்த ரூ.10 லட்சம் குட்கா பறிமுதல் லாரியில் ஏற்றிச் செல்ல முயன்ற 5 பேர் பிடிபட்டனர்

" alt="" aria-hidden="true" />

பெரியபாளையம்,

 

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி கட்டு தெருவில் நித்யானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக ஆரணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு, சிலர் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அதில், ஆரணியை சேர்ந்தவர்களான குடோனின் உரிமையாளரான நித்யானந்தம் (வயது 39) மற்றும் நாகராஜ் (22), தூண்டி கிருஷ்ணா (23), சரண்குமார் (22), ராஜ்குமார் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும், இதில் ஐயப்பன் என்பவர் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.



 


சிறையில் அடைப்பு

 

இதையடுத்து, பதுக்கி வைத்த குட்கா மூட்டைகள் மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஆரணி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

 

பின்னர், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின்பேரில், ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா எங்கிருந்து குடோனுக்கு கொண்டு வரப்பட்டது? இதில், யாருக்கு தொடர்பு உள்ளது? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

 

மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் பொன்னேரி நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.





Popular posts
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
Image
ஒருவழியாக கேரளா பயன்படுத்திய சூப்பர் ரூட்டை டெல்லியும் பிடித்து கொண்டுவிட்டது
Image
தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது
Image
ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
Image